Events Tamil Dictionary Baby Names Movies Tamil Sites Temples WebTV Photos Videos Online Radio Forum Classifieds Thirukkural Mobile Apps
 முதல் பக்கம் முதல் பக்கம்   Events and Registration Events and Registration Post Your Events

பூப்பு முதல் பேரிளம் வரை மகளிர் நலம் 2017 - கோயம்புத்தூர், இந்தியா

Event Location:
R.V.S. செந்தில் ஆண்டவர் திருமன மண்டபம்
Event Address:
குமரன் கோட்டம், கண்ணம்பாளையம், திருச்சி சாலை, சூலூர்
கோயம்புத்தூர்
Tamil nadu
India
Coordinator Details:
மருதவாகை, நலம், இயல், ஐந்தினை, தூய்மை, சிறகுகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள்
Phone: 9750100011, 8825776538, 9842232885
பூப்பு முதல் பேரிளம் வரை மகளிர் நலம் 2017 - கோயம்புத்தூர், இந்தியா
Events Schedule
DATE(DD-MM-YYYY) Timings
24 December 2017 09.00 AM to 05.00 PM

ஒரு நாள் பிரம்மாண்ட கருத்தரங்கு.
நாள் : 24.12.2017 (டிசம்பர்)
இடம்: சூலூர், கோயம்புத்தூர்.

பூப்பு முதல் பேரிளம்பெண் வரை மகளிர் நலம், ஆண் பெண் இருபாலருக்கும் குழந்தையின்மைக்கான காரணங்களும் தீர்வுகளும், குடும்ப நலம் மற்றும் இயற்கை வாழ்வியல் குறித்த பிரம்மாண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி.

இந்நிகழ்ச்சியில் 2000 த்திற்கும் மேற்பட்டோர் பங்குபெறஉள்ளனர். நிகழும் சிலை மாதம் (மார்கழி) 9 ஆம் நாள்,சதய நட்சத்திரத்தில், சஷ்டி திதியும், சித்த யோகமும் கூடிய சுபயோக சுப தினத்தில், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழங்காலத் தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட நொய்யல் நதிக்கரை நாகரீகத்தை கொண்ட சூலூரில் நடைபெறவுள்ளது.

நம் மரபில் பெண்கள், உலகம் போற்றும் அரசிகளாகவும், புலவர்களாகவும், போர் வீராங்கனைகளாகவும், ஞானிகளாகவும் வாழ்ந்துள்ளார்கள். மாதராய் பிறப்பதற்கே நல் மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்றார் பாரதி. பெண்கள் நாட்டின் கண்கள் என்பார்கள். பெண்ணின் நலமே நாட்டின் வளம். ஒரு பெண் நலமாக இருந்தால் தான் வீடு நலமாக இருக்கும், வீடு நலமாக இருந்தால் நாடு வளமாக இருக்கும்.

இந்த மண், பெண்களைத் தெய்வமாக போற்றும் மண். கல்விக்குப் பெண் தெய்வம், செல்வத்திற்குப் பெண் தெய்வம், வீரத்திற்குப் பெண் தெய்வம். மாரிக்குப் பெண் தெய்வம், கிராம தேவதைக்குப் பெண் தெய்வம். சக்தி இல்லையேல் சிவம் இல்லை, சக்தி இல்லாமல் சிவமே இயங்காது. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் பெண் இருக்கிறாள் என்பார்கள். பெண் என்பவள் இயங்கும் சக்தி, ஆம் இயக்கும் பராசக்தி.

"செறிவும் நிறையுஞ் செம்மையுஞ் செப்பும் அறிவும் அருமையும் பெண்பா லன்ன" தொல். பொருளியல் -14

என்று பெண்ணின் பெருமையை போற்றுகிறது தொல்காப்பியம்.

ஒக்கும் எரி குளிர வைத்தாள் ஒருத்தி !
வில்வேடனை எரித்தாள் ஒருத்தி !
பக்கம்உற அமுது அளித்தாள் ஒருத்தி !
எழு பரி தடுத்தாள் ஒருத்தி !
கொக்கென நினைத்தாயோ ? கொங்கனவா என்றாள் ஒருத்தி !
புலியை முறத்தால் விரட்டியடித்தாள் ஒருத்தி !

இப்பேர்பட்ட சொல், செயல், சிந்தனை, உடல், மனம் என அனைத்திலும், ஆரோக்கியமான பெண்கள் வாழ்ந்த இதே மண்ணில் !

வயல் வேலைக்கு சென்ற கர்பிணிப்பெண்கள் வரப்பில் பிரசவம் நடந்து வீடு திரும்பும் போது கையில் குழந்தையோடு வந்த இதே மண்ணில் !

வீட்டில் பத்து, பதிணைந்து குழந்தைகளைப் பெற்ற பெண்கள் வாழ்ந்த இதே மண்ணில் தான்.

தற்பொழுது ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கவே கருத்தரிப்பு மைய வாசலில் தவம்கிடக்க வேண்டியுள்ளது.

கருப்பைக் கட்டி, கருப்பை வாய்ப் புற்று நோய், மாதக்கணக்கில் தொடர், அதிக உதிரப்போக்கு, மாதக்கணக்கில் உதிரப்போக்கின்மை, மாதவிடாய்க் கோளாறுகள், வெள்ளைப்படுதல், பிறப்புறுப்பில் அரிப்பு, ஹார்மோன் பிரச்சனைகள், தைராய்டு, மன அழுத்தம், குழந்தையின்மை போன்ற பல வலி வேதனைகளுடனே வாழ்ந்து வருகிறார்கள்.

பேதை முதல் பேரிளம்பெண் வரை இவர்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கு அளவென்பதே கிடையாது.

இதற்கெல்லாம் என்ன காரணம் ? மூன்று முக்கியமான காரணங்கள்.

1 - உணவுமுறை
2 - வாழ்க்கைமுறை
3 - ............................ ?

மூன்றாவது அதிர்ச்சியளிக்கும் காரணம், ........இது நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும்.

நிகழ்ச்சி நிரல் !
---------------------------

இடம் - R.V.S. செந்தில் ஆண்டவர் திருமன மண்டபம், குமரன் கோட்டம், கண்ணம்பாளையம், திருச்சி சாலை, சூலூர், கோயம்புத்தூர்.

மாதம் - டிசம்பர்
தேதி : 24.12.2017 (ஞாயிற்றுக் கிழமை)
நேரம் : காலை 9 மணி முதல் மாலை  5 மணி வரை.

Venue : R.V.S. SENTHIL AANDAVAR THIRUMANA MANDAPAM, KUMARAN KOTTAM, KANNAMPALAYAM, SULUR, COIMBATORE.

Month - December
Date: 24.12.2017 (Sunday)
Time : 9 am to 5 pm.

சிறப்பு விருந்தினர்கள் !
-----------------------------------------

திருமதி.மணிமொழி அவர்கள் - ANATOMIC THERAPHY FOUNDATION, COIMBATORE.
தலைப்பு - பூப்பெய்தலும் பண்பாடும்,  மாதவிடாய் பஞ்சு (Sanitary Napkin) தீமைகள், செய்முறைப் பயிற்சி மற்றும் இயற்கை வழியில் பிரசவம்.

Dr.திரு.மதன் சங்கர் M Sc., MPhil., PhD அவர்கள் - PSG Arts and Science College, HOD of Bio Technology Department.
‎தலைப்பு - கருப்பைப் பிரச்சனைக்கான காரணங்களும் ஆராய்ச்சிகளும்.

Hr.திரு.போஜராஜ் M.Acu அவர்கள்,
*தலைப்பு - இரைப்பையும் கருப்பையும்.

Hr.திரு.மகேஷ் குமார் BE, PGDCA, M.Acu. அவர்கள் - PRINCIPAL : UNIVERSAL ACADEMY OF ACUPUNCTURE SCIENCE. COIMBATORE.
‎தலைப்பு - கரு உருவாக்கம்.

தந்த்ரா ஸ்வாமி திரு.போதி பிரவேஷ் அவர்கள்,
‎தலைப்பு - குழந்தையின்மைக்கான காரணங்களும் தீர்வுகளும் மற்றும் குடும்ப நலம்.

பங்கேற்பு கட்டணம் - ரூ.200 (காலை, மாலை - தேனீர், மதிய உணவு, மற்றும் நிகழ்ச்சி நடத்தும் செலவுகளுக்காகப் பெறப்படுகிறது.)

முன்பதிவு அவசியம்.

9750100011
8825776538
9842232885

கட்டணத்தை வங்கியில் செலுத்திய பின்னர், மேற்கண்ட எண்ணிற்கு அழைத்து தங்கள் வருகையை முன்பதிவு செய்யலாம்.

கட்டணங்களை வங்கியில் செலுத்த !
----------------------------------------------------------------

STATE BANK OF INDIA,
City Branch,
A/C no. - 10583805847
Name - V.Renuka,
IFSC code - SBIN0000990

CITY UNION BANK
Perur branch,
A/C no. - 282001001607892
Name - V.Renuka
IFSC code - CIUB0000282

இதில் ஏதேனும் ஒரு வங்கி கணக்குகளில் கட்டணத்தை செலுத்திவிட்டு Receipt ஐ 9842232885 இந்த Whats app எண்ணிற்கு அனுப்பிவிட்டு குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிற்கு அழைத்து தங்கள் பெயரை முன்பதிவு செய்யலாம்.

நேரில் முன்பதிவு செய்யும் இடங்கள் !
-----------------------------------------------------------------

மருதவாகை
VIVAGA CARD, ‎11 th STREET, TATABAD, GANDHIPURAM, CBE-12
0422-4346555

MENAKA CARD, LAKSHMI MILL JUNCTION,
AVINASHI ROAD,
0422-4322436

சிறகுகள்
155-A, RANGAI GOWDER ST, SUKKRAWARPET, OPP. SOWDAMMAN TEMPLE, CBE-1.
9842232885

இயல்
IYAL STORE,
#13, 50-ROAD, KRISHNASAMY NAGAR, RAMANATHAPURAM, COIMBATORE - 641045.
9842701946, 9715495181

நலம்
5 341-A, AMMAKANNU ACU CLINIC, GANESH NAGAR, ARUMUGA KAVUNDANOOR, PERUR, COIMBATORE-641010.
9750100011

இந்த முகவரியில் ஏதேனும் ஒரு இடத்தில் நீங்கள் கட்டணத்தை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

நிகழ்சிக்கான Ticket Confirmation குறுஞ்செய்தி மூலம் தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

Program Tickets Confirmation will be sent Through SMS.

----------------------------------------------------------

நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்துகொள்ளலாம் ?

• மேலே குறிப்பிட்ட பிரச்சனைகள் உள்ள பெண்கள்.

• கருப்பையில் பிரச்சனைக்கான காரணத்தை அறிய விரும்புவோர்.

• பெண்களை அம்மாவாக, குழந்தையாக, மனைவியாக, சகோதரியாக, உற்றாறாக, உறவினராக, சொந்தமாக, பந்தமாக கொண்ட ஆண்கள்.

• இயற்கை வழியில் பிரசவம் நடக்க வேண்டும் என்று விரும்புவோர்.

• குழந்தைப் பேறு எதிர்நோக்கி உள்ள தம்பதிகள்.

• குடும்ப நலனை மேம்படுத்த விரும்புவோர்.

• Sanitary Napkin ஐ வீட்டிலேயே தயாரிக்க விரும்புவோர், இதை சிறுதொழிலாக எடுத்து செய்ய விரும்புவோர்.

• இயற்கை வழி வாழ்வியலை அறிய விரும்புவோர்.

• குழந்தை வளர்ப்பை தெரிந்து கொள்ள விரும்புவோர்.

என, ஆரோக்கியமான சமூகம் உருவாக வேண்டும் என நினைக்கும் அனைத்து நல்உள்ளங்களும், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம்.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

என வள்ளுவர் வாக்கிற்கினங்க உங்கள் பிரச்சனைக்கான மூல காரணத்தையும், அதற்குண்டான தீர்வுகளையும் இப் பிரம்மாண்டமான நிகழ்ச்சி உங்கள் வழங்கும்.

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே.

உத்தமன் கோயில் கொண்ட இந்த உடலை பாதுகாப்போம்.

பெண்னின் நலம் பேணுவோம்
நாட்டின் வளம் பாதுகாப்போம்.

அனைவரும் வருக . . . .
ஆரோக்கியம் பெருக . . . .

நன்றி.

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டுஎன்
ஆற்றுங் கொல்லோ உலகு.

மழையைப் போல் கைம்மாறு கருதாமல் ஒற்றுமையாய் செயல்பட்டால், இந்த உலகில் எதையும் சாதிக்கலாம் என்பதைக் கருத்தில் கொண்டு, கோயம்பத்தூரில் உள்ள ஆறு அமைப்புகளும் இணைந்து, இந்த நிகழ்ச்சியை நடத்த உள்ளார்கள்.

- நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு

மருதவாகை, நலம், இயல், ஐந்தினை, தூய்மை, சிறகுகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள்.

பூப்பு முதல் பேரிளம் வரை மகளிர் நலம் 2017 - கோயம்புத்தூர், இந்தியா
Posted on: 20 Nov 2017   |    Views: 546 

More Events Listing

   Tamil Malarum Maiyam - Moivirundhu for Gaja Relief
   14-வது ஆண்டு மார்கழி தமிழிசை விழா
   சென்னையில் திருவையாறு - பருவம் 14
   உலகத்தமிழ் தொழில் முனைவோர் மாநாடு - மதுரை
   Save Delta a Fundraiser for Gaja Cyclone Relief - NJ, USA
   40 வயதிற்கு மேல் உடலில் ஏற்படும் மாற்றங்களும் சித்த மருத்துவ வாழ்வியல் தீர்வுகளும்..
   ஆண்டியப்பனூர் அரசு சித்த மருத்துவப் பிரிவில் முப்பெரும் விழா - வேலூர், இந்தியா
   உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு மற்றும் பேரவை விழா திட்டமிடல் கூட்டம் 2 - அமெரிக்கா
   பொங்கலோ பொங்கல் - ஜப்பான்
   வளைகுடாப் பகுதியில் தமிழர் சங்கமம் 2018 - அமெரிக்கா
  Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 

Ticket Category

  Events and Registration  Events and Registration
  Movies  Movies

UPCOMING EVENTS

Save Delta a Fundraiser for Gaja Cyclone Relief - NJ, USA Save Delta a Fundraiser for Gaja Cyclone Relief - NJ, USA
Tamil Malarum Maiyam - Moivirundhu for Gaja Relief Tamil Malarum Maiyam - Moivirundhu for Gaja Relief
சென்னையில் திருவையாறு - பருவம் 14 சென்னையில் திருவையாறு - பருவம் 14
14-வது ஆண்டு மார்கழி தமிழிசை விழா 14-வது ஆண்டு மார்கழி தமிழிசை விழா
உலகத்தமிழ் தொழில் முனைவோர் மாநாடு - மதுரை உலகத்தமிழ் தொழில் முனைவோர் மாநாடு - மதுரை